Xசரிவை நோக்கி உள்நாட்டு உற்பத்தி!

public

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவிகிதத்தை விடக் குறைவாகவே இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்ட சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான டி.பி.எஸ். வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘நவம்பர் மாதம் வெளியான பணமதிப்பழிப்பு மற்றும் ஜூலை மாதம் அமலான சரக்கு மற்றும் சேவை வரி ஆகியன காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் குறுகிய கால அடிப்படையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

2016ஆம் நிதியாண்டில் 7.9 சதவிகித வளர்ச்சி இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 5.7 சதவிகிதமாக வளர்ச்சி குறைந்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சரிவாகும். மேலும் ஜூலை – செப்டம்பர் காலாண்டிலும் வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே நடப்பு 2017-18 நிதியாண்டின் நிறைவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு காரணமாகக் கட்டுமானம், வர்த்தகம், லாஜிஸ்டிக் மற்றும் சிறு குறு நிறுவனங்கள் துறைகளில் ஏற்பட்ட பாதிப்பு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0