�
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (ஜனவரி 11) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜம்ஷெத்பூர் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கோவா அணி.
இந்தியன் சூப்பர் லீக் போட்டிகள் விறுவிறுப்பான இரண்டாம் பாதியை எட்டியுள்ளன. முதல் பாதி முடிவில் சென்னை, பெங்களூரு, புனே, கோவா ஆகிய நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. இந்நிலையில் இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அனைத்து அணிகளும் போராடும் என்பதால் தொடர் மிகுந்த சுவாரஸ்யமானதாக இருக்கும்.
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கோவா மற்றும் ஜம்ஷெத்பூர் அணிகள் பலபரிட்சை நடத்தின. அதில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் கோலினை கோவா அணி வீரர் மனுவல் ப்ரூனோ (45) பெனால்ட்டி முறையில் அடித்தார். அதனைத் தொடர்ந்து 54ஆவது நிமிடத்தில் ஜம்ஷெத்பூர் வீரர் மேத்யூஸ் ஒரு கோல் அடித்ததால் 1-1 என போட்டி சமனானது. பின்னர் 60ஆவது நிமிடத்தில் ப்ரூனோ மற்றொரு கோல் அடித்து கோவா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற வைத்தார்.
போட்டி முடியும் வரை இரு அணிகளும் வேறெந்த கோலும் அடிக்கவில்லை. எனவே கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.�,