Xகுல்தீப்பால் சரிந்த டாப் ஆர்டர்!

Published On:

| By Balaji

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சில் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி, இங்கிலாந்தின் நாட்டிங்கம் நகரில் இன்று (ஜூலை 12) மாலை 5 மணிக்குத் (இந்திய நேரப்படி) தொடங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக இடம்பிடித்திருந்த சித்தார்த் கவுலுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இங்கிலாந்து அணியில் அதிரடி ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு பதிலாக மொயீன் அலி இடம்பிடித்திருந்தார்.

டாஸ் வென்ற இந்தியா, இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ஜேசன் ராய், ஜானி பேரிஸ்டோ ஜோடி இந்திய வேகப்பந்துவீச்சுத் தாக்குதலை அடித்து நொறுக்கியது. இந்த விக்கெட்டை எடுக்க கேப்டன் விராட் கோலி, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், யுஜ்வேந்திர சஹால், ஹர்திக் பாண்டியா ஆகியோரைப் பயன்படுத்தியும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. முதல் 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் குவித்தது.

11ஆவது ஓவரில் இங்கிலாந்தின் முதல் விக்கெட்டை எடுத்து குல்தீப் யாதவ், இந்திய அணிக்கு நம்பிக்கையளித்தார். சிறப்பாக ஆடிய ஜேசன் ராய் 38 ரன்களில் வெளியேறினார். குல்தீப்பின் அடுத்த ஓவரில் ஜோ ரூட் 3 ரன்களுக்கும், ஜானி பேரிஸ்டோ 38 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் இயன் மார்கனை 19 ரன்களில் சஹால் வெளியேற்றினார்.

சற்றுமுன்வரை இங்கிலாந்து அணி 25 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. பென் ஸ்டோக்ஸ் 18 ரன்களுடனும், ஜாஸ் பட்லர் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share