�
கதாநாயகியாக அறிமுகமான மிகக் குறுகிய காலத்திலேயே முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்தியத் திரையுலகில் கவனம் பெற்றவர் கீர்த்தி சுரேஷ். தற்போது பாலிவுட்டிலும் தடம் பதிக்க கிளம்பியுள்ளார்.
சர்கார் திரைப்படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வேறெந்தப் படமும் வெளியாகவில்லை. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு மட்டும் தமிழ், தெலுங்கு திரையுலகில் ஏழு படங்கள் வெளியாகின. தமிழில் அவர் நடிக்கும் அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளிவருவதற்குள் மலையாளம், தெலுங்கில் பரபரப்பாக இயங்கிவருகிறார்.
மலையாளத்தில் வரலாற்றுக்கதையாக உருவாகும் ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் . பாலிவுட்டில் அமித் ஷர்மா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியான போதும் யாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கீர்த்தி சுரேஷ் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்திய கால்பந்து அணியை பெருமைப்படுத்தும் விதமாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. போனி கபூர், ஆகாஷ் சாவ்லா, அருனவா ஜாய் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.�,