xகிச்சன் கீர்த்தனா: பேபிகார்ன் கோல்டன் ஃப்ரை!

Published On:

| By Balaji

Gமாலை நேர ஸ்நாக்ஸாக எப்ப பார்த்தாலும் பஜ்ஜி, வடை, பிஸ்கட் இப்படின்னு சாப்பிடுற உங்களுக்காக, இன்னிக்குக் கொஞ்சம் சத்தான பேபிகார்ன் கோல்டன் ஃப்ரை செய்வது எப்படின்னு பார்க்கலாம். இதைக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

பேபிகார்ன் – 8 அல்லது 10

சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு – 2 கப்

அரிசி மாவு – 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

சோடா உப்பு – 1 சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் பேபிகார்னை நன்கு அலசி, பின் நீளமாக இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் சோள மாவு மூன்றையும் ஒன்றாகப் போட்டு, அதன்பின் உப்பு, மிளகாய்த் தூள், சோடா உப்பு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்துக்குக் கலந்துகொள்ள வேண்டும்.

நறுக்கி வைத்துள்ள பேபிகார்னை அதில் போட்டுப் புரட்டி, அரை மணிநேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள பேபிகார்னை ஒவ்வொன்றாகப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான பேபிகார்ன் கோல்டன் ஃப்ரை ரெடி!

குறிப்பு

இதை மல்லி சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும். குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளும் இதில் அடங்கியுள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share