Xகிச்சன் கீர்த்தனா: குழாப்புட்டு!

Published On:

| By Balaji

கேரளாவில் குழாப்புட்டுங்குறது ஃபேமஸ். ஆனா, இது இப்ப இல்லாத ஊர்களே இல்லைங்கலாம். அப்படிப்பட்ட பாரம்பரிய உணவான குழாப்புட்டை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு – 1 கப்

நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல் – தலா கால் கப்

ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்

நெய் – சிறிதளவு

முந்திரி – 8

உப்பு – 1 சிட்டிகை

செய்முறை

முதலில் பச்சரிசி மாவை வெறும் வாணலியில் நன்கு வறுக்கவும். நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

வறுத்த பச்சரிசி மாவில் உப்பு கரைத்த நீர் தெளித்துப் பிசிறி, 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். புட்டுக்குழாயில் கொஞ்சம் மாவை அடைத்து, அதன்மேல் ஓர் அடுக்காகத் தேவையான அளவு தேங்காய்த் துருவல் கலவையை அடைத்து, மற்றோர் அடுக்காக மாவு வைத்து, பிறகு மீண்டும் தேங்காய்த் துருவல் கலவையை வைத்து அடைக்கவும். இதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பிறகு, குழாயிலிருந்து புட்டை எடுத்து, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share