xகாஞ்சனா ரீமேக்கிலிருந்து வெளியேறிய லாரன்ஸ்

Published On:

| By Balaji

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா 3 திரைப்படம் அண்மையில் வெளியாகி உலகளவில் சுமார் ரூ.120 கோடி வசூல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து காஞ்சனா படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்வதற்கான பணிகளை தொடங்கினார் ராகவா லாரன்ஸ். லஷ்மி பாம் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (மே 18) வெளியானது.

இதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்பான நண்பர்களே, ரசிகர்களே, மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்த உலகத்தில் பணத்தையும் புகழையும் விட தன்மானமே ஒரு நபருக்கு மிகவும் முக்கியமானது. அதனால் காஞ்சனாவின் இந்தி ரீமேக்கான லஷ்மி பாம் படத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்

நான் விலகுவதற்கு பல காரணங்கள் இருப்பதால் என்ன காரணமென்று கூற விரும்பவில்லை. ஒரு காரணம் என்னவென்றால், என்னிடம் தெரிவிக்கப்படாமலும், ஆலோசிக்கப்படாமலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான தகவலை என்னிடம் மூன்றாம் நபர் தெரிவித்தார். போஸ்டர் வெளியீடு பற்றிய தகவலை மூன்றாம் நபர் சொல்லி தெரிந்துகொள்வது ஒரு இயக்குநருக்கு வேதனையை ஏற்படுத்தும்.

நான் மிகவும் அவமதிக்கப்படுவதாகவும், ஏமாற்றப்படுவதாகவும் உணர்கிறேன். ஒரு படைப்பாளியாக போஸ்டரின் வடிவமைப்பும் எனக்கு அதிருப்தியளித்துள்ளது. இது எந்த இயக்குநருக்குமே நடக்கக்கூடாத ஒன்று. எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்பதால் கதையை என்னால் முடக்கி வைக்க முடியும். ஆனால் அப்படி செய்வது தொழிலுக்கு சரியாக இருக்காது. தனிப்பட்ட முறையில் அக்‌ஷய் குமார் மீது எனக்கு மரியாதையுண்டு.

அவர்கள் விருப்பப்படி வேறு இயக்குநரை வைத்து படத்தை உருவாக்கலாம். நான் விரைவில் அக்‌ஷய் குமாரை சந்தித்து கதையை வழங்கவுள்ளேன். நல்ல முறையில் படத்திலிருந்து விலக விரும்புகிறேன். படம் வெற்றிபெற எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தை கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ், ஷபினா எண்டர்டய்ன்மெண்ட், துஷார் எண்டர்டய்ன்மெண்ட் ஹவுஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதியன்று ரிலீஸாகவுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

**

[விமர்சனம்: மான்ஸ்டர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/14)

**

.

**

[பாஜக ஆட்சிக்கான ஆதரவு வாபஸ்: நாகா மக்கள் முன்னணி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/8)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share