Xஐடி துறையில் திறமைக்குப் பஞ்சம்!

Published On:

| By Balaji

i

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் சவால்களை எதிர்கொள்ளும் அளவுக்குத் திறனுடைய பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருப்பதாக நாஸ்காம் அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் மேலாண்மைத் துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனத் தேசியக் கூட்டமைப்பு (நாஸ்காம்), இந்திய ஐடி துறையில் உள்ள சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகளை அலசியுள்ளது. இதுதொடர்பாக நாஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவிகிதத்தினரின் திறனை உடனடியாக மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்ப அம்சங்களுக்கு ஏற்ப ஊழியர்கள் தங்களது திறனை மேம்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக நாஸ்காம் கூறுகிறது.

தேவை மற்றும் சப்ளை ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி ஐடி துறையின் செயல்பாடுகளை மந்தமாக்கியுள்ளது. நாஸ்காம் ஆய்வுப்படி, மொத்தம் 5 லட்சம் வேலைகளுக்கு 1.40 லட்சம் திறன்மிக்க பணியாளர்களுக்கான குறைபாடு 2018ஆம் ஆண்டில் இருந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் இத்துறையில் 2.30 லட்சம் பணியாளர்களுக்கான குறைபாடு இருக்கும் எனவும் இந்த் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அளவில் இத்துறையில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையில் 54 சதவிகிதத்தினர் தங்களது திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக எச்சரித்துள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share