Xஏற்றுமதியை நம்பும் மின்னணு துறை!

public

இந்தியாவின் மின் மற்றும் மின்னணு உபகரணங்கள் தயாரிப்புத் துறைக்கான சந்தை வாய்ப்புகள் உள்நாட்டில் குறைந்துள்ளதால் வெளிநாட்டுச் சந்தைகளை இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் குறிவைத்துள்ளன.

இதுகுறித்து இந்திய மின்னணு பொருள்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவரான ஹரிஷ் அகர்வால் எஸ்.எம்.இ. டைம்ஸ் ஊடகத்திடம் கூறுகையில், “உள்நாட்டுச் சந்தை நலிந்துவிட்டது. இத்துறையில் காணும் வளர்ச்சி யாவும் பன்னாட்டு நிறுவனங்களாலேயே கிடைக்கிறது. எனவே, இத்துறைசார் நிறுவனங்கள் அந்நியச் சந்தைகளைக் குறிவைத்துள்ளன. வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும் பட்சத்தில் இத்துறையின் மதிப்பு இன்னும் 7 முதல் 8 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலராக உயரும். தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தேவை அதிகமாக இருப்பதால் நாம் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

தற்போதைய நிலையில் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு பொருள்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த அளவை இன்னும் 7 முதல் 8 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்று ஹரிஷ் கூறுகிறார். அரசுக்குச் சொந்தமான எட்டு முன்னணி மின்னணு தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது செலவுகளை ரூ.8,300 கோடி வரையில் குறைத்துள்ளதால் இத்துறைக்குப் பெருத்த இழப்பு ஏற்படும் என்று ஹரிஷ் எச்சரிக்கிறார். 2017-18ஆம் ஆண்டில் இத்துறைக்கான பட்ஜெட் மூலதனச் செலவு ரூ.62,600 கோடியாக இருந்த நிலையில், 2018-19ஆம் ஆண்டுக்கு அது ரூ.54,270 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *