உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாக சட்டமன்றத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் இல்லாத சூழல் நிலவிவருகிறது. இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மக்களவையில் இதுதொடர்பாக திமுக எம்.பி ஆ.ராசா நேற்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “உள்ளாட்சி நிதிகள் எங்களிடம்தான் உள்ளன. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் நிலுவைத் தொகையை வழங்க முடியாது” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று (ஜூலை 17) திமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் உள்ளது. மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி நிதியை பெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. எனவே இனியாவது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராகவே உள்ளது. 22 ஆண்டுகளான வார்டு வரையறை செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது வரையறை செய்து முடிக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார். மேலும் 2015 முதல் 2019 வரை வரவேண்டிய நிதி ரூ. 12,312 கோடியில் மத்திய அரசு இதுவரை ரூ. 8,352 கோடி வழங்கி உள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வலியுறுத்தி வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அக்டோபர் 31ஆம் தேதி வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த அவகாசம் வேண்டும்” என்ற தமிழக தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், இந்த வழக்கினையும் முடித்துவைத்தது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
�,”