விஜய் சேதுபதி மணிரத்னத்துடன் பேச்சுவார்த்தையில் இருப்பது தமிழ் சினிமா முழுவதும் பரவியிருக்கும் ஒரு தகவல். அதைப்பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருப்பதால் நாம் வேறு ரூட்டில் செல்வோம். மணிரத்னம் சோலோவாக படம் இயக்கும் முறை ‘காற்று வெளியிடை’ திரைப்படத்துடன் முடிந்துவிட்டது. ஒரு திரைப்படத்தை தனி நடிகருடன் எடுத்துவிட்டால், அடுத்து இரண்டு மூன்று நடிகரை ஒன்றாகச் சேர்த்து எடுப்பது மணிரத்னத்தின் ஸ்டைல். ஆனால், சமீப காலமாக அந்த மாதிரி புராஜெக்டுகளை கையிலெடுக்காமல் இருந்த மணிரத்னம் இப்போது அதற்குத் தயாராகிவிட்டார்.
‘காற்று வெளியிடை’ முடிவடைந்ததும் துல்கர் சல்மானுடன் ஒரு திரைப்படத்துக்காகப் பேசியிருந்தார் மணிரத்னம். அதன்பிறகு அந்த புராஜெக்ட் இல்லை என்று தகவல் வெளியானது. இதற்குக் காரணம் ஃபகத் பாசிலுடன் மணிரத்னம் பேசியதுதான். துல்கரைவிட சீனியர் நடிகரான ஃபகத்திடம் மணிரத்னம் சென்றுவிட்டதால், துல்கருக்கு டாட்டா காட்டிவிட்டார் என்று மலையாள மீடியாக்கள் அவரை கிண்டல் செய்தன. அதன்பிறகு தமிழில் விஜய் சேதுபதியுடன் பேசினார் என்ற தகவல் வெளியான பிறகு இப்போது அரவிந்த் சாமி கால்ஷீட் கேட்டு மணிரத்னத்திடமிருந்து மெஸேஜ் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேசமயத்தில் இன்னொருபக்கம், தற்போது தமிழில் அதிக படங்கள் நடித்துக்கொண்டிருக்கும் துல்கர் சல்மானை கமிட் செய்ய ஒரு தயாரிப்பாளர் முயன்றபோது மணிரத்னம் சார் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கிய பிறகு உங்களுக்கு தேதி தருகிறேன் எனக் கூறியிருக்கிறார் துல்கர். இதிலிருந்து, மணிரத்னம் பேசிய அனைவருமே இந்தப் படத்தில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிகிறது. ஒருவேளை, இந்த நால்வரையுமே வைத்து மணிரத்னம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்பது விரைவில் தெரியவரும்.
�,”