”இந்த சிம்பு, எப்பவுமே இப்படித்தான், தன்னைக்காட்டிலும் வயசு மூத்த பொண்ணை லவ் பண்ற மாதிரியே படம் எடுக்குறான் என 6 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு ஆன்ட்டி புலம்பி ஸ்டேடஸா போட்டிருந்ததை இதே தேதியில் அப்போது ஷேர் செய்திருக்கிறேன். அதை, இன்னிக்கு முகநூலில் இருக்கும் ‘ஆன் திஸ் டே’ செயலி (ஆப்ஸ்) காட்டியது. ஃபேஸ்புக்கில் இருக்கும் உருப்படியான ஆப்ஸ்களில் இதுவும் ஒண்ணு. உருகி உருகி யாருக்கோ ஜொள்ளுவிட்டு நாம போட்ட ஸ்டேட்டஸோ, இன்னிக்கு காமெடி பீஸா ஆகிவிட்ட தலைவருக்காக நண்பர்களிடம் ‘புரட்சிகரமாக’ தம் கட்டியதை எல்லாம் கரைக்டா நியாபகம் வச்சு அன்னின்னைக்கு எடுத்து நம்ம காட்டி நம்ம மானத்தை நம்ம கிட்டவே வாங்குற ஆப்ஸ். இன்ன்னையோட ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ரிலீசாகி 6 வருஷமாச்சாம், நம்ம மக்கள்ஸ்தான் பெரிய ஃபீலிங்ஸ் பார்ட்டிகளாச்சே! இப்படி ஒரு மேட்டர் சிக்கினா போதாதா? உடனே #6yearsofvtv ஹேஷ்டேக் போட்டு குத்தவச்சு உக்காந்து, “இங்க இன்னா சொல்லுது..ஜெஸி ஜெஸி சொல்லுதா”ன்னு ட்விட்டர் முழுக்க ஆட்டின் வரைஞ்சு அம்பு உட்டுகிட்டு இருக்காங்க. பத்தாத குறைக்கு, சிம்புவை வச்சு தைரியமா “அச்சம் என்பது மடமையடா”ன்னு அடுத்த ப(பா)டம் படிச்சிக்கிட்டு இருக்கிற கௌதம் மேனனையும் சேர்த்துகிறாங்க. கௌதம் மேனனின் ட்விட்டர் ஹேன்டிலை இவய்ங்க ஃபீல் பண்ணி போடுற ட்விட் எல்லாத்திலேயும் டேக் பண்ணி ஆட்டையில் சேத்துக்கிறாங்க. இதுல ‘கார்த்திக்’னு பேரு வச்சவங்க கொடுக்கிற அலப்பர ஒரு தனி ட்ராக்கில் ஓடிட்டு இருக்கு.
“தள்ளாடுதுங்க” யுனைட்டட் ப்ரவரிஸ் ஷேர்லாம். விஜய் மல்லையா பதவியைவிட்டு விலகினா, தள்ளாடாமல் என்னாகும். சாராய சாம்ராட் விஜய் மல்லையா தொடர்ந்து நேத்து இரவு 10 மணியில இருந்து இன்று காலை 11 மணி வரைக்கும் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தார். நம்ம தமிழ் ட்விட்டர்களாச்சு பரவாயில்ல. ஒரளவுக்கு மரியாதையாகத்தான் ட்விட் பண்ணினாங்க. வட இந்தியா பக்கமெல்லாம் காதை குடுக்க முடியல. நாறக்கிழி கிழிச்சிக்கிட்டு இருந்தாங்க.
தஞ்சாவூர் கோர்ட்டுக்கு விஜயகாந்த் பெயில் வாங்கப் போறார்ன்னு செய்தி கிடைச்சவுடனே ஆன்லைன் பீப்பிள்ஸ் அலார்ட் ஆகிட்டாங்க. அவங்க நம்பிக்கையை எந்தவிதத்திலும் குறை வைக்காம பாத்துக்கிட்டாரு நம்ம கேப்டன். அனமை முருகேசன் முன் செல்ல கோர்ட்டுக்குள் படியேறப்போன கேப்டனின் காலை எவனோ மிதிச்சுவிடா உடனே ‘மதுரை” மோடுக்கு போன கேப்டன் நாக்கத் துருத்தி கை ஓங்க அடுத்த அரை மணி நேரத்தில அந்த சீன் ஜிஃப்பாகி ( GIF) பாக்கிற வாலில் எல்லாம் கேப்டன் அடிக்கப்பாய்ந்து கொண்டிருந்தார். எல்லாத்டோட அல்டிமேட் வீடியோ ஒன்னு வைரலா ஷேர் ஆகிட்டு இருக்கு அதில நம்ம கேப்டன் பேசுற வீடியோ ஓடுது, ஆடியோவா பாகுபலி காலகேயன் சவுண்ட் கேக்குது.
ரம்யா – ➰ ♏ @praburemya_ 17h17 hours ago
கட்சி நிர்வாகியை நாக்கை துருத்தி அடிக்கப் பாய்ந்தார் விஜயகாந்த் – செய்தி
# மதுர காரங்க கிட்ட இருந்து கலைஞர காப்பாத்துறது கஷ்டம்பா ????????????
Prasath @imprasath 3h3 hours ago
இடித்த கல்யாண மண்டபத்தை கருணாநிதி கட்டி தருவாரா? விஜயகாந்த் கேள்வி // நீங்க கூட்டணிக்கு ஒகேன்னு சொல்லுங்க ஒரு ஷாப்பிங் மாலே கட்டி தருவாரு.
லாக் ஆப்�,”