xஅமைச்சர் ராஜினாமா செய்வாரா?: செந்தில் பாலாஜி

Published On:

| By Balaji

அரவக்குறிச்சியில் நான் டெபாசிட் வாங்கிவிட்டால் ராஜினாமா செய்கிறேன் என்று கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், சொன்னதை செய்வாரா என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

அமமுகவிலிருந்து விலகி கடந்த டிசம்பர் மாதம் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனை விட 37,957 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மக்களவைத் தொகுதியில் நின்றாலும் சரி, அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் போட்டியிட்டாலும் சரி அவர் டெபாசிட் வாங்கிவிட்டால் நான் அரசியலைவிட்டே சென்றுவிடுகிறேன்” என்று சவால் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் வெற்றிச் சான்றிதழை வாங்கிய பிறகு இதுகுறித்து பேசிய செந்தில் பாலாஜி, “தேர்தலில் நான் டெபாசிட் வாங்கிவிட்டால் சிலர் அரசியலை விட்டு விலகிக் கொள்கிறேன், பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன் என்று சொன்னார்கள். எனக்குத் தெரிந்து அவர் நாளை ராஜினாமா செய்யலாம் என்று நினைக்கிறேன். அப்படி நடந்தால் கரூர் தொகுதிக்கு தேர்தல் வரும். நீங்களே இதுகுறித்து அவரிடம் கேட்டுவிட்டு சொன்னால், அடுத்த இடைத் தேர்தலுக்கு நாங்கள் தயாராவோம்” என்று சாடியுள்ளார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)

**

.

**

[திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்?](https://minnambalam.com/k/2019/05/24/63)

**

.

. **

[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)

**

.

.

**

[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)

**

.

**

[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share