Xஅமேசான் பிளாக் செய்த அக்கவுன்ட்!

public

C

ஆன்லைன் பயனர்களுக்கு ஒரிஜினல் பொருட்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. அதேபோல் ஆர்டர் செய்த பொருட்கள் வந்து சேருமா என்ற சந்தேகமும் பலரிடம் உள்ளது. பல்வேறு பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த ஆன்லைன் வர்த்தகம், சிலருக்கு சிக்கல்களை ஏற்படுத்துவதும் அதனால் அதுகுறித்த புகார்கள் அவ்வப்போது எழுவதும் வழக்கமான ஒன்று.

அதன்படி M.S.Dhoni திரைப்படம் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் அமேசான் நிறுவனத்தால் தனது அக்கவுன்ட் பிளாக் செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் அதில் அவர் ஆர்டர் செய்த புத்தகங்கள் இன்னும் டெலிவரி செய்யப்படவில்லை என்றும், இந்த மாதம் மட்டும் சுமார் 20 புத்தகங்கள் இதுபோன்று வராமல் போனதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அமேசான் நிறுவனத்தின் Customer care இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த டிவிட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள அமேசான் நிறுவனம், **இதுகுறித்து விரைவான தீர்வினை வெளியிடுவோம்** எனத் தெரிவித்துள்ளது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *