தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான கரட்டுப்பட்டி, மீனாட்சி புரம்,முந்தல் ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிக மழைப்பொழிவைத் தந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. சென்னையைப் பொறுத்தவரைக் கடந்த 2014ஆம் ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 30 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 6) உள்வட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 9 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,