Xஃபேக் ஐடியில் மோடிக்கு வாழ்த்து!

Published On:

| By Balaji

நரேந்திர மோடிக்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்று கூறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து அதுபற்றிய பேச்சுகள் அனைத்து தளங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருக்க திரை பிரபலங்கள் சிலர் தங்கள் கருத்துக்களை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கரின் பெயரில் உள்ள டிவிட்டர் கணக்கில் இருந்து இன்று (மே 24) காலை நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

“வாழ்த்துகள் எமது நிரந்த பிரதமர் நரேந்திர மோடி சார்! #மோடி ரிட்டர்ன்ஸ்” என்று பதிவிடப்பட்டிருந்தது. மோடிக்கு வாழ்த்து சொன்ன பிரியா பவானி சங்கர் என செய்திகள் வெளியாக அதை பிரியா பவானி சங்கர் தற்போது மறுத்துள்ளார். வெளியான பதிவு அவரது பெயரைத் தாங்கிய ஃபேக் ஐடி ஆகும்.

அந்த பதிவை தனது அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கிலிருந்து ரீடிவிட் செய்துள்ள பிரியா பவானி சங்கர், “அப்படியே நரேந்திரமோடிக்கும் ஒரு அக்கவுண்ட் கிரியேட் பண்ணிட்டா பிரைம் மினிஸ்டர் மாதிரியே டிவிட் போட்ருலாமே.. ஃபேக் அக்கவுண்டுக்கு எதுக்குடா இவ்வளோ எமோஷன். உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

பிரியா பவானி சங்கர் சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)

**

.

**

[திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்?](https://minnambalam.com/k/2019/05/24/63)

**

.

. **

[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)

**

.

.

**

[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)

**

.

**

[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share