பசி…பட்டினி…பட்டியல் போடும் பொருளாதார ஆய்வாளர் ஜெ.ஜெயரஞ்சன்

Published On:

| By Balaji

கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி சர்வதேச உணவு தினம் உலகமெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையம் உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்தின்மை கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டது.

அந்த தரவரிசைப்பட்டியலில் இந்தியா 102 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 117 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா இந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பட்டியலில் 119 நாடுகளில் இந்தியா 103 ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. பசிக்கு எதிரான திட்டங்களில் முன்னேற்றம் மற்றும் பின்னடைவுகளை மதிப்பிடவும் பட்டினியின் அளவைக் கண்டறியவும் இந்த வருடாந்திர குறியீட்டு பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

இந்தப் பட்டியலில் இலங்கை 66வது இடத்தையும், வங்காளதேசம் 88வது இடத்தையும், பாகிஸ்தான் 94 ஆவது இடத்தையும் பெற்றிருக்கிறது. இந்தியாவில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வெறும் 9.6 சதவீதம் பேருக்கு மட்டுமே குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவு அளிக்கப்படுகிறது என்னும் அதிர்ச்சிகரமான தகவலையும் வெளியிட்டிருக்கிறது. அதே போன்று கடுமையான பசி நிலவும் 45 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என வெல்துங்கர்ஹில்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல்டுவைட் ஆகியவை தயாரித்த அறிக்கை கூறுகின்றது.

ஒவ்வொரு வருட பசி பட்டியலிலும் இந்தியா பின்னோக்கியே செல்கிறது இதை உடனடியாக கவனத்தில் கொள்வது அவசியம் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது குறித்து பொருளாதார ஆய்வாளர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் நமது மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரிக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். இந்த நிலை ஏன் ஏற்பட்டுள்ளது, அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்னென்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கு அவர் விடையளிக்கிறார்.

முழு வீடியோ கீழே இடம்பெற்றுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share