உலக ஊடகங்களை கவனிக்க வைத்த மாமல்லபுரத்து தெருநாய்!

Published On:

| By Balaji

இந்திய பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங் உடன் அர்ஜுன ரதம் பற்றி விளக்கி கொண்டிருக்கையில் கடுமையான பாதுகாப்புகளை தாண்டி அங்கே ஒரு கருப்பு நாய் ஓடிக்கொண்டிருந்தது.

இதைப் பார்த்து அதிகாரிகளுக்கு டென்ஷன் ஆகி விட்டது. கடுமையான முயற்சிகளை எடுத்து மாமல்லபுரத்திலிருந்து தெரு நாய்கள் எல்லாம் அகற்றிய நிலையில் எப்படி வந்தது என்பதுதான் அதிகாரிகளின் டென்சனுக்கு காரணம்.

இதுபற்றி மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “ ஏன் சார் கேக்குறீங்க மோடியும் சீன அதிபரும் வர்றாங்கனு சொல்லி மாமல்லபுரத்தையே ஒரு புரட்டு புரட்டி விட்டோம். மாமல்லபுரத்தில் தெரு நாய்கள் அதிகம் என ஏற்கனவே பல சுற்றுலாப் பயணிகளும், லோக்கல் வாசிகளும் புகார் சொல்லி இருக்காங்க. அப்ப எல்லாம் நடவடிக்கை எடுக்காம, இப்ப திடீர்னு இந்தத் தலைவர்கள் வருகைக்காக ஒட்டுமொத்த தெருநாய்களையும் மாமல்லபுரத்திலிருந்து அப்புறப்படுத்த உத்தரவு போட்டார்கள்.

அதனால மாமல்லபுரம் சுற்றுவட்டார ஏரியா முழுசும் அலைஞ்சு 434 நாய்களை புடிச்சு மரக்காணம் பக்கத்துல அனுமந்துறை பகுதியில் போட்டு அடைச்சி வச்சுருந்தோம்.

அங்கிருந்து தப்பித்து வந்ததா அல்லது இங்கேயே எங்க கிட்ட இருந்து சிக்காம எஸ்கேப் ஆகிடுச்சானு தெரியல. அந்த நாய்தான் தலைவர்கள் சந்திப்பின்போது ஓடி கேமராவுல தெரிஞ்சி உலகம் பூரா ஃபேமஸ் ஆகிடிச்சு” என்கிறார்கள்�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share