;
பூசணியை அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியைத் தக்கவைக்கும். ஆனால், பூசணிக்காய் என்றதும் வேண்டாம் என்று ஒதுக்குபவர்கள் பலருண்டு. அவர்களுக்கு இந்த பூசணி லட்டு செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.
**எப்படிச் செய்வது?**
50 கிராம் வெள்ளைப் பூசணியை தோல் நீக்கி, கழுவி, துருவி வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் பூசணி துருவலைச் சேர்த்துக் கிளறவும். அத்துடன் நெய் சேர்த்து மேலும் கிளறவும். பிறகு 200 கிராம் சர்க்கரையைச் சேர்த்து சுருண்டு வரும்போது அரை லிட்டர் பால் ஊற்றி அது வற்றும்வரை கிளறவும். இதனுடன் 100 கிராம் கொப்பரைத் தேங்காய்த்தூள், 10 பொடித்த ஏலக்காய்த்தூள், 10 பொடித்த முந்திரி சேர்த்து கெட்டியாக வரும்போது இறக்கி சூட்டுடன் தேவையான அளவுக்கு லட்டு பிடித்து வைக்கவும். இது 20 நாள் வரைக்கும் கெடாது.
**சிறப்பு**
வெள்ளைப் பூசணியில் வைட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும்.
�,