தனியார் பள்ளிகள் நாளை( ஜூலை 19 ) இயங்காது என போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நேற்று (ஜூலை 17 ) போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. இதனை கண்டித்து நாளை முதல் தனியார் மெட்ரிக், நர்சரி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்பின்படி இன்று நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நாளை முதல் வழக்கம் போல் அனைத்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்