�
புகழ் பெற்ற மெசேஜிங் சேவையான வாட்சப், ஃபிங்கர் லாக் மூலமாக பாதுகாக்கப்படும் சேவையை ஆண்ட்ராய்டு ஃபோன்களிலும் அறிமுகம் செய்துள்ளது.
அதிகபட்ச பாதுகாப்பை அளிக்கும் விதமாக ஃபிங்கர் லாக் சேவை, ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வாட்சப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலமாக தனி நபரின் குறுஞ்செய்தி தகவல்கள், பிற தகவல் பரிமாற்றங்கள் போன்றவை பிறரால் ஹேக் செய்யப்பட இயலாதவாறு பாதுகாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Starting today, Android users can add another layer of security to their WhatsApp messages with fingerprint lock. 🔒 Learn more about how to enable the setting here: https://t.co/biwzjhTwop pic.twitter.com/mVDoE4gurk
— WhatsApp Inc. (@WhatsApp) October 31, 2019
இந்த சேவையைப் பயன்படுத்த வாட்சப் பயன்பாட்டாளர்கள் அதனை அப்டேட் செய்தாலே போதுமானது. அதுமட்டுமின்றி எவ்வளவு நேரம் ஃபிங்கர் லாக் மூலமாக வாட்சப் லாக் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் பயன்பாட்டாளர் முடிவு செய்யலாம். உடனடியாக, ஒரு நிமிடம், 30 நிமிடம் என்று இதற்காக மூன்று ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கைரேகை மூலமாக பாதுகாப்பு அளிக்கும் இந்த பயோமெட்ரிக் அங்கீகாரம் ஐஓஎஸ் கருவிகளில் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. தற்போது ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கும் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டிருப்பது பயன்பாட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
�,”