மணியன் கலியமூர்த்தி
கடந்த சில ஆண்டுகளாக வராக்கடன் பிரச்னையில் சிக்கிய யெஸ் வங்கியின் நிதி நிலைமை படுமோசமாக மாறியுள்ளது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாமல் தள்ளாடி வருகிறது மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யெஸ் வங்கி. மேலும் மூலதன நிதியை திரட்ட பல முயற்சிகளை மேற்கொண்டாலும். அதற்கான எதுவும் பலன் அளிக்கவில்லை.
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டு முடிவுகளை வெளியிடாமல் தாமதித்து வந்தது இந்த வங்கி. மேலும் வராக்கடன் அளவு அதிகரித்ததன் காரணமாக ரிசர்வ் வங்கியின் அமால்கமேஷன் மற்றும் மோரடோரியம் எனப்படும் வர்த்தக தடை விதிகளின்படி. வங்கியின் மறுமலர்ச்சிக்கு தெளிவான திட்டம் எதுவும் இல்லை எனவும். 1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் 45 வது பிரிவின் கீழ் தடை விதிக்க மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி விண்ணப்பித்தது. இதன் காரணமாக புதிய தடை உத்தரவுகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக. ரிசர்வ் வங்கியின் அறிக்கையை ஏற்று. யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.50000க்கு மேல் எடுக்க நிதியமைச்சகம் மார்ச் 5 ஆம் தேதி தடை விதித்தது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும். ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி, வர்த்தகத்தில் இதன் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. 33 ரூபாய்க்கு தொடங்கிய வர்த்தகம் பங்கு மதிப்பு ரூ.5 வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அந்த வங்கி ஒட்டுமொத்தமாக 85சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2004ம் ஆண்டு ராணா கபூர் சகோதரர்களால் தொடங்கப்பட்ட இந்த வங்கி. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரந்து விரிந்து வந்த வேளையில். 2008 மும்பை தாக்குதலின் போது இந்த வங்கி நிறுவனர்களில் ஒருவரான அசோக் கபூர் கொல்லப்பட்டார். அதற்கு பிறகு வங்கியின் நிர்வாகத்தில் நுழைந்த அசோக் கபூரின் மகள் கோஜியா நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அசோக் கபூரின் மகள். வங்கியின் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து ராணா கபூரை நீக்க வேண்டும் எனவும் புதிய இயக்குநராக தன்னை நியமிக்கும்படி கூறியிருந்தார்.
இந்த வழக்கை எதிர்த்து மனுத் தாக்கல் செய்திருந்த ராணா கபூர், 2018 மார்ச் வரை தன்னை இயக்குநராக தொடர அனுமதிக்க வேண்டினார். ஆனால் இவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம். உடனடியாக இயக்குனர் பதவியில் இருந்து விலகும்படி உத்தரவிட்டது. அதுவரை லாபத்தில் இயங்கி வந்தது யெஸ் வங்கி.
அடுத்ததாக மார்ச் 2019ல் ரன்வீத் கில் என்பவர் யெஸ் வங்கியின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வங்கியின் முதலீடுகளை திருப்புதல் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைச் செய்வதற்கான பொறுப்பு அவருக்கு அப்போது ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய இயக்குநர்களிடம் ராணா கபூர் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று புகார் கூறப்பட்டது. அதன் பிறகு ரிசர்வ் வங்கியின் தணிக்கை குழு அறிக்கையின்படி. யெஸ் வங்கி வரைமுறையை பின்பற்றாமல் பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துள்ள தாகவும். வராக் கடன் விவகாரத்தை முந்தைய இயக்குநர்கள் குழு மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விஷயத்தை ராணா கபூர் மறுத்தாலும். அசோக் கபூரின் மகள் ஒப்புக் கொண்டு உண்மையான ஆவணங்களை ரிசர்வ் வங்கியிடம் வழங்கினார். இதன்படி கடந்த 2016ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையின்படி இந்த வங்கி 749 கோடி வராக்கடன் உள்ளதாக தெரிவித்திருந்தது . ஆனால் ரிசர்வ் வங்கி தணிக்கை குழுவினர் இதே காலகட்டத்தில் 4900 கோடி வாராக் கடன் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்
மேலும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழு, ஐ.எல், எஃப்.எஸ், டி.எச்.எஃப்.எல், ஜெட் ஏர்வேஸ், எஸார் ஷிப்பிங், காக்ஸ் & கிங்ஸ், கபே காபி டே ஆகிய நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள வரம்பை விட அதிகமாக கடன் கொடுத்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
அது முதல் கொண்டு. இன்று வரை இந்த வங்கியின் முதலீடுகள் குறைந்துள்ளன. மேலும் அதற்கடுத்த ஒவ்வொரு காலாண்டிலும் வாராக் கடன் விகிதங்கள் எதிர்பாராத அளவிற்கு உயர்ந்தன.
இந்த நிலையில் இயக்குனர் பதவியில் இருந்து ஜனவரி 2020 ம் தேதி விலகிய ராணா கபூர். யெஸ் கேபிடல் (இந்தியா) மற்றும் மோர்கன் கிரெடிட்ஸ் ஆகியவை நிறுவனங்களில் இருந்தும் வெளியேறினார்.
பங்குகளை குறைக்கும் வகையில் புதிய இயக்குநர்கள் கொண்டு வந்த திட்டங்களின் படி. யெஸ் வங்கியில் ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் இருந்த ராணா கபூரின் பங்குகள். கடந்த டிசம்பர் மாத இறுதியில் சுமார் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்தன. இதன் காரணமாக யெஸ் வங்கியில் ராணா கபூருக்கு இருந்த பங்குகளை முழுமையாக இழந்து பூஜ்ஜியமானது. அதற்கடுத்து வங்கியின் நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக மீண்டெழ முடியாத இறுதி அத்தியாயத்தை அடைந்துள்ளது யெஸ் வங்கி.
குடும்ப விவகாரமாக தொடங்கிய இந்த பிரச்சினை. தற்போது இந்திய பொருளாதார வீழ்ச்சி வரை கொண்டு சென்றுள்ள விவகாரம் தற்போது ஒட்டுமொத்த வங்கித் துறையையும் பாதித்துள்ளது. மேலும் இந்த வங்கியின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் கடுமையாக சரிந்து சில்லறை முதலீட்டாளர்கள் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் 33 ரூபாய்க்கு தொடங்கிய யெஸ் வங்கியின் பங்குகள். காலை முதலே கடுமையாக சரிவை சந்தித்து, காலை 12 மணிக்கெல்லாம் 5 ரூபாய்க்கு வந்தது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி கந்தா தாஸ் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள தகவலின்படி யெஸ் வங்கியின் விதிமுறைகளில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்,
மேலும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்ஐசி நிறுவனங்கள் யெஸ் வங்கியின் பங்குகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக பங்குச் சந்தையில் ஒரு செய்தி பரவ தொடங்கியது.
இதன் காரணமாக கடும் வீழ்ச்சியில் இருந்த இதன் பங்குகள். சற்று உயரத் தொடங்கியது. வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை இறுதி வர்த்தகத்தில் 16 ரூபாய் வரை உயர்ந்து இதன் வர்த்தகம் முடிவடைந்தது.
இந்நிலையில் இந்த வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரான ராணா கபூரின் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளதாகவும். வரைமுறையற்ற கடன் வழங்கியது. பண மோசடி உள்ளிட்ட காரணங்களுக்காக கபூரை கைது செய்ய உள்ளதாக தெரிவிக்கின்றன தகவல்கள். இதற்கிடையில் ராணா கபூர் வெளிநாட்டிற்கு தப்பிவிடாதபடி அவருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில். கடந்த மாதம் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் முதலீடு செய்யப்பட்ட சுமார் 1300 கோடி ரூபாய் திடீரென இந்த வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கியின் பரிவர்த்தனை தடை வருவதற்கு முன் இவ்வளவு பெரிய தொகை எடுக்கப்பட்டுள்ளதால். இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட சதியா என்று குமுறுகின்றனர் பொதுமக்கள்.
கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல்ஸ், ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என இந்தியாவின் பொருளாதாரமே சரிவடைந்து வரும் இந்த வேளையில்.
தினசரி வணிக சேவையில் பங்காற்றி வரும் தனியார் துறையின் மிகப்பெரிய வங்கியே திவால் நிலைக்கு தள்ளப்பட்ட விஷயம், நாட்டின் பொருளாதார வல்லுனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் தனியார் வங்கிகள் அதிகப்படியான கடன்களை வழங்கியதன் காரணமாக தான் கழுத்துக்கு அழகாக இருக்க வேண்டிய ஆபரணங்கள் கூட. இன்று மக்களுக்கு தூக்கு கயிறாக மாறியுள்ளதாக கூறுகிறார் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கத்தைச் சார்ந்த எஸ். நாகராஜன்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 லட்சம் விவசாயிகள் வங்கிகளுக்கு வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும். இதே நிலை நீடித்தால் நாட்டில் உள்ள மீதி விவசாயிகளும் மாண்டு போகும் நாள் கூடிய விரைவில் ஏற்படும் என்று எச்சரிக்கிறார். கடந்த 2018ம் ஆண்டு வரை லாபத்துடன் இயங்கி வந்த யெஸ் வங்கி. இரண்டு ஆண்டுகளில் இவ்வளவு வீழ்ச்சியை சந்தித்துள்ள விவகாரம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில்.
**கட்டுரையாளர் குறிப்பு**
மணியன் கலியமூர்த்தி சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் காப்பீட்டுப் பிரிவில். கிளை மேலாளராக பணிபுரியும் இவர். இன்றைய நிகழ்கால அரசியலின் நிதர்சனங்களையும். பங்குச் சந்தை பற்றிய பல அரிய தகவல்களையும்.சோழர்கள் பற்றிய வரலாற்று புதனத் தொடர் ஒன்றையும் பல்வேறு ஊடகங்கள் மூலமாக எழுதி வருகின்றார். அவரைத் தொடர்புகொள்ள: 9962792686
�,