ஊழியர்களுக்கு உற்சாகம்: சிஇஓவின் அசத்தல் நடனம்!

Published On:

| By Balaji

உலகில் எந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறதோ, அதே அளவுக்கு அதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான மன அழுத்தமும் அதிகரித்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. குறிப்பாக ஐடி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை பார்த்தால் அவர்கள் எந்த அளவுக்கு மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

இதற்காக அலுவலகங்களில் வேலைகளுக்கு நடுவே டான்ஸ், கேம்ஸ். ஆக்டிவிட்டீஸ் என பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர். அந்தவகையில் வெல்ஸ்பன் (welspun) நிறுவனத்தின் சிஇஓ தீபாலி கோயங்கா தனது ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஊழியர்களுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.

1994ல் தமிழில் பிரபுதேவா, நக்மா நடித்து வெளியான காதலன் படத்தில், இடம்பெற்ற முக்காலா முக்காபுலா பாடல், 2020ல் வெளியான ஸ்ட்ரிட் டான்ஸர் 3டி பாலிவுட் படத்தில் இந்தியில் இடம் பெற்றது. தற்போது இந்த பாடலுக்குத்தான் தீபாலி கோயங்கா தனது அலுவலக ஊழியர்களுடன் நடனமாடியிருக்கிறார். அவருடன் மற்ற ஊழியர்களும் தங்களது இருப்பிடத்தில் இருந்தே நடனமாடியிருக்கிறார்கள்.

இதுகுறித்த வீடியோவை ஆர்பிஜி என்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குநர் ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அதில் ”பணி இடத்தில் மகிழ்ச்சியான கலாச்சாரத்தை” உருவாக்கியதற்காக தீபாலி கோயங்காவுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள தீபாலி, ”இதுபோன்று இருக்க கூடிய பணியிடங்களை பார்த்து மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள தீபாலி, தொழிலதிபர்களான ஆனந்த் மகேந்திரா, கவுதம் அதானி மற்றும் கிரண் மஜூம்தர் ஆகியோரை டேக் செய்து, இதுவே என்னுடைய மகிழ்ச்சியான பணியிடம், உங்களுடையது என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இப்படி ஒரு சிஇஓ தங்களுக்கு இல்லையே என்றும் கூறி வருகின்றனர். தீபாலி கோயங்கா 2016 ஃபோர்ப்ஸ் பட்டியலில், இந்திய அளவில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 16ஆவது இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-கவிபிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share