^கிச்சன் கீர்த்தனா: தர்பூசணி சர்பத்

Published On:

| By admin

தர்பூசணியிலிருக்கும் லைகோபீன் (Lycopene), சிட்ருல்லின் (Citrulline) சத்துகள் மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டுகளாகச் செயல்படுகின்றன. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இவை உதவும். இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்த அழுத்த பாதிப்புகளைக் குறைக்க உதவும். இதிலிருக்கும் பொட்டாசியம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசை பிடிப்புப் பிரச்சினையையும், லைகோபீன் புற்றுநோய் வருவதைத் தடுக்கவும் உதவும் என்பது கூடுதல் சிறப்பு.
**என்ன தேவை?**
தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் – 2 கப்
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள், கறுப்பு உப்பு, சாட் மசாலா, மிளகுத்தூள் – தலா கால் டீஸ்பூன்
சர்க்கரை – 8 டேபிள்ஸ்பூன்
புதினா இலைகள் – 2 டேபிள்ஸ்பூன்
ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
புதினா இலைகளையும், ஐஸ்கட்டிகளையும் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். மற்ற அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக அடிக்கவும். கிளாஸ் டம்ளர்களில் ஐஸ்கட்டிகளைப் போட்டு, மேலே மிக்ஸியில் அடித்த சர்பத்தை ஊற்றி, சில புதினா இலைகளைத் தூவவும்.

**[நேற்றைய ரெசிப்பி: தர்பூசணி – இஞ்சி பானம்](https://minnambalam.com/public/2022/04/08/1)**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share