Xகிச்சன் கீர்த்தனா: தர்பூசணி ஷேக்

Published On:

| By admin

ுழு தர்பூசணியைத் தூக்கிப் பார்க்கும்போது அது அதிக எடையுடையதாகத் தெரிய வேண்டும். பழம் முழுக்க ஒரே பச்சையாக இல்லாமல், ஒரு பகுதியில் கொஞ்சம் மஞ்சள், வெள்ளை கலந்து இருக்க வேண்டும். அதுதான் இயற்கையான சூரிய வெளிச்சத்தில் பழுத்த நல்ல பழம். அப்படிப்பட்ட தர்பூசணியை வாங்கினால் அது அதிக இனிப்புடன், நிறைய நீருடன் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட தர்பூசணியில் இந்த ஷேக் செய்து பருகுங்கள். கோடையைக் குளுமையாக்குங்கள்.
**என்ன தேவை?**
தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் – அரை கப்
புளிக்காத புதிய தயிர் – ஒரு கப்
ஸ்ட்ராபெர்ரி – 5 (லேசாக தோல் சீவி, துண்டுகளாக்கவும்)
சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்
கிவிப்பழம் – 2
புதினா இலைகள் – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
கிவிப்பழத்தை நறுக்கவும். 4 கிவிப்பழத் துண்டுகள், 4 தர்பூசணித் துண்டுகள் இவற்றை எடுத்துத் தனியே வைக்கவும். மீதியுள்ள தர்பூசணி, கிவி, ஸ்ட்ராபெர்ரி, தயிர், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அடித்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்து, கண்ணடி டம்ளர்களில் ஊற்றவும். ஒவ்வொரு டம்ளரிலும் ஒரு துண்டு கிவி, ஒரு துண்டு தர்பூசணி, ஒன்றிரண்டு புதினா இலை சேர்த்து அலங்கரிக்கவும்.
**[நேற்றைய ரெசிப்பி: இளநீர் – தர்பூசணி டிலைட்](https://minnambalam.com/public/2022/04/05/1/watermelon-tender-coconut-delight)**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share