கர்நாடகா விலங்கியல் பூங்கா ஒன்றில் சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனத்தைச் சிங்கம் ஒன்று ஆக்ரோஷத்துடன் துரத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியிருக்கிறது.
பெல்லாரி மாவட்டம் ஹம்பியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பிலிகல் வனப்பகுதி உள்ளது. இதனையொட்டி, அடல் பிஹாரி வாஜ்பாய் விலங்கியல் பூங்கா அமைந்திருக்கிறது. சென்னையில் எப்படி வண்டலூர் உயிரியல் பூங்காவோ, அதுபோலவே கர்நாடகத்தில் இந்த பூங்கா பிரபலமானது. இந்த பூங்காவில் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த பூங்காவின் காட்டுப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற ஜீப்பை சிங்கம் ஒன்று ஆக்ரோஷமாகத் துரத்தியது. வாகனத்தை நோக்கி சிங்கம் முன்னேறுவதைக் கண்டு அச்சமடைந்த அந்த ஜீப்பின் ஓட்டுநர் வாகனத்தை வேகமாக இயக்கினார். எனினும் வா கனத்தைச் சிங்கம் விடாமல் துரத்தியது. ஒரு கட்டத்தில் ஜீப்பின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கியது சிங்கம். இதனால் வாகனத்தில் சென்றவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். சிங்கம் துரத்தி வந்ததை வாகனத்தில் பயணித்த ஒருவர் தனது கேமராவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.�,”