�வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கும் ஸ்நாக்ஸில் உலர் பழங்கள், நட்ஸ் வகைகள், பயறு, சிறு தானியம், வெல்லம், நாட்டுச்சர்க்கரை, எள், நிலக்கடலை, கீரை, சிறிதளவு நெய், பழங்கள், பால் இவற்றில் ஏதாவது இடம்பெற்றிருக்கலாம். இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம் உள்ளிட்ட சத்துகள் கிடைக்கின்றன.
**எப்படிச் செய்வது?**
ஒன்றிரண்டாகப் பொடித்த 50 கிராம் வால்நட்டுடன் தேவையான அளவு பொடித்த சர்க்கரை, 4 டீஸ்பூன் பொட்டுக்கடலை மாவு, 2 டேபிள்ஸ்பூன் பால் பவுடர், 2 சிட்டிகை ஏலக்காய்த்தூள், 2 டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலைப்பொடி, 2 டீஸ்பூன் வறுத்த வெள்ளை எள் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் சூடான நெய் கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். குழந்தைகள் பசிக்கிறது என்கிற சாப்பாட்டு நேரமில்லாத வேளையில் கொடுக்கவும்.
**சிறப்பு**
ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்குச் செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.�,