இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 1.96 கோடி புதிய பான் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து *இந்திய வருமான வரித் துறை* ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2018ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 1.96 கோடி புதிய பான் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் நாட்டில் பான் கார்டு வைத்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 37.9 கோடியாக அதிகரித்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதக் கணக்குப்படி 35.94 கோடி பேரிடம் பான் கார்டு இருந்துள்ளது.
வரி வளையத்தை விரிவுபடுத்த மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால்தான் பான் கார்டு பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதில் அதிகபட்சமாக 97.46 விழுக்காடு தனிநபர்கள் பான் கார்டு பெற்றுள்ளனர். 1.08 விழுக்காடு பான் கார்டுகளை நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்தப் பத்து இலக்க எண்ணை வைத்துத்தான் வரி செலுத்தவும், ரிட்டன் தாக்கல் செய்யவும் இயலும். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு புதிதாக வரி வளையத்திற்குள் பல்வேறு நிறுவனங்கள் இணைந்துள்ளதும் பான் கார்டு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்குக் காரணமாக உள்ளது.�,