wபழிவாங்கல்: இறைச்சி விளம்பரத்தில் விநாயகரா?

public

ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு விளம்பரம் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இறைச்சி மற்றும் விலங்குகள் தொடர்பான சந்தை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள ‘மாமிசம் மற்றும் கால்நடை ஆஸ்திரேலியா’ (Meat and livestock Australia) நிறுவனம் செப்டம்பர் நான்காம் தேதியன்று வெளியிட்ட விளம்பரத்தில் விநாயகர் இறைச்சி சாப்பிடுவதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பலரும் கடுமையான எதிர்ப்புகளைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதிக அளவிலான மக்கள் ஆட்டிறைச்சியை உண்பதால் நீங்கள் தனித்து விடப்படமாட்டீர்கள் என்ற பொருளில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தில், விநாயகர், இயேசு, புத்தர், தோர் மற்றும் சீனாவின் குவானியன் என பல்வேறு மதங்களின் தெய்வங்கள் மற்றும் புராணக் கதைமாந்தர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதைக் காணலாம். இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த விளம்பரத்தை அகற்ற வேண்டும் என்று விளம்பர நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த விளம்பரத்தைப் பலரும் வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விளம்பரம் குறித்து பிபிசி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் MLA நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜர் ஆண்ட்ரூ ஹோவியின் கூறியுள்ளதாவது, **“நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆட்டிறைச்சியைச் சாப்பிடலாம் என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த விளம்பரத்தின் நோக்கம். பல ஆண்டுகளாக முயற்சி செய்து ஆட்டிறைச்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெற்றி கண்டோம். அந்த வெற்றியைக் கொண்டாட கடவுள்களும், புராணக் கதை நாயகர்கள் கூட ஆட்டிறைச்சியை உண்பதாகக் காட்டுவது சரியாக இருக்கும் என்று நினைத்தோம். இதை விட மிகச் சிறப்பாக எங்கள் வெற்றியை எப்படி உணரவைப்பது**என்று கேள்வி எழுப்புபியுள்ளார்.

செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்கவிருப்பதால், அதற்குள் இந்த சர்ச்சையை முடிக்கவேண்டும் என்பது கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்திய விளம்பர நிறுவனங்களின் மூலமாக இந்தியாவுக்கு விளையாட வரும் மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்களை வைத்து விளம்பரங்களை உருவாக்குவது வழக்கம்தான் என்றாலும், இம்முறை பீடா சாப்பிடுவது, தெருவில் [டான்ஸ் ஆடுவது](https://www.youtube.com/watch?v=Rm2OMyCVKUE) என கொஞ்சம் ஓவராகவே சென்றிருந்தனர். எனவே, இந்த விளம்பரப் போரை இத்துடன் நிறுத்துவது இரு அணிகளுக்குமிடையேயான நல்லுறவைப் பாதுகாக்கும்.

[விளம்பரம்:](https://www.youtube.com/watch?v=-91RoNbux_0)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *