மதன் கார்க்கி ஹாலிவுட் படத்தில் பணியாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழ்த் திரையுலக இயக்குநர்கள் ஒருபக்கம் குழந்தைகளை கவரும் வகையில் ஒன்றிரண்டு படங்களை வெளியிட்டு திரையரங்குகளுக்கு பார்வையாளர்களை அழைத்துவரும் பணியைச் செய்கின்றனர். ஹாலிவுட் திரையுலகினர் இதில் ஒருபடி மேலே போய் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதுமுள்ள குழந்தைகளை குறிவைத்து படங்களை வெளியிட்டுவருகின்றனர்.
அண்மையில் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் சர்வதேச அளவில் வசூல் சாதனை படைத்தது.
1992ஆம் ஆண்டு அலாதீன் என்ற அனிமேஷன் திரைப்படத்தை டிஸ்னி நிறுவனம் வெளியிட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ஸ்னேச், செர்லாக் ஹோம்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய கை ரிச்சி இயக்கத்தில் இந்த அனிமேஷன் படம், திரைப்படமாக உருவாகியுள்ளது. வில் ஸ்மித் , மேனா மஸாத், நவோமி ஸ்காட் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று (மே 24) தமிழிலும் வெளியாகியுள்ளது.
தமிழ்த் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவதோடு நண்பன், எந்திரன், பாகுபலி ஆகிய படங்களுக்கு வசனமும் எழுதிவருகிறார் மதன் கார்க்கி. அந்தவகையில் தற்போது அலாதீன் படத்திற்கு பாடல்கள், வசனங்கள் எழுதியுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “டிஸ்னி தயாரிப்பில் இன்று வெளியாகும் அலாதீனில் பங்கு வகித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வசனங்கள், பாடல்களை எழுதியுள்ளேன். உங்களது விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க திமுக வியூகம்!](https://minnambalam.com/k/2019/05/23/167)
**
.
**
[மோடிகளை உருவாக்கும் மோடி](https://minnambalam.com/k/2019/04/11/19)
**
.
.
�,”