Wஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்!

Published On:

| By Balaji

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய வீரர் ரிஷப் பந்த், ஸ்டூவர்ட் பிராட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வீரர்கள் ஆட்டமிழக்கும் சமயத்தில் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சளார் உற்சாகத்தில் துள்ளிக் குதிப்பது சகஜம்தான். ஆனால் இம்முறை பந்த் ஆட்டமிழந்ததும் பிராட் அவரை நோக்கி வந்து கோபமாக சில வார்த்தைகளை பரிமாறிக் கொண்டுள்ளார். இதுபோன்ற செயல் ஆட்டமிழந்த வீரருக்கு மேலும் கோபத்தைத் தூண்டும் என்பதால் இது ஐசிசியின் விதிமுறைக்கு அப்பாற்பட்டது. எனவே தற்போது ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அவரது போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒழுங்கீனச் செயலுக்காக அவருக்கு 1 தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

ஐசிசியின் எமிரேட்ஸ் பேனலை சேர்ந்த நடுவர் ஜெஃப் க்ரோவ் விதித்த இந்தத் தண்டனையை பிராட் ஏற்றுக்கொண்டதால், இதுதொடர்பாக இனி எந்தொரு விசாரணையும் நடக்காது. ஜெஃப் க்ரோவின் இந்தத் தீர்ப்பை, கள நடுவர்கள் மரைஸ் எராஸ்மஸ், க்றிஸ் கஃபனே மற்றும் மூன்றாவது நடுவர் அலீம் டர் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share