தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்மதுடு 2’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘மன்மதுடு’ திரைப்படம், 2002-இல் நாகார்ஜுனா-சோனாலி பிந்த்ரே நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘மன்மதுடு 2’ உருவாகி திரைக்கு வரக்காத்திருக்கிறது.
நாகார்ஜுனாவின் மனம் எண்டர்பிரைசஸ், வயகாம் 18 ஸ்டூடியோஸ், அன்னபூர்ணா ஸ்டூடியோஸ், ஆனந்தி ஆர்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள ‘மன்மதுடு 2’ திரைப்படத்திற்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார்.
நீண்ட வருடங்களாகத் திருமணம் ஆகாமல் சுற்றித் திரியும், நாகார்ஜுனாவின் காதல் லீலைகளை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியிருக்கிறது என்பது டீசர் மூலமாகத் தெரிகிறது. நாகார்ஜுனா நடிகைகளுடன் மிக நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பது போல் வெளியாகி இருக்கும் இந்த டீசர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘அது அது அந்தந்த வயசுல நடந்தா தான் நல்லா இருக்கும் ’என்று நாகார்ஜுனாவிடம் நடிகை லெக்ஷ்மி கூறும் வசனமும் கவனம் ஈர்த்துள்ளது.
மாஸ்கோவின் காவேரி, வணக்கம் சென்னை, யூ-டர்ன், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ராகுல் ரவீந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தேவதர்ஷினி, ஜான்ஸி, லெக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், நிஷாந்தி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைக்களத்தில் முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ் மற்றும் நாகார்ஜுனாவின் மருமகள் நடிகை சமந்தா ஆகியோரும் சிறப்புத் தோற்றத்தில் வரவிருக்கின்றனர் என்பது ‘மன்மதுடு 2’ திரைப்படத்தின் கூடுதல் சிறப்பு.
**
மேலும் படிக்க
**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/13/17)**
�,”