wவிஷால், சிறு தயாரிப்பாளர்களைக் காக்கவில்லை!

public

நடிகரும், தயாரிப்பாளர்களுமான ஆர்.கே.சுரேஷ் மற்றும் உதயா ஆகியோர் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டது முதல் தயாரிப்பாளர்களின் பல பிரச்சினைகள் பற்றிப் பேசிவரும் விஷால் அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டாரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக சிறிய பட்ஜெட்டில் திரைப்படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு விஷால் ஆதரவாக இல்லை என்றும், ஆன்லைன் பைரஸியைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கையை அவர் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டிவருகின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் கொடுத்துள்ளார். அவருடன் நடிகர் உதயாவும் ராஜினாமா செய்துள்ளார். சிறு பட தயாரிப்பாளர்களை பாதுகாக்கவும், அவர்களது வளர்ச்சிக்காகவும் சங்க தலைவராக விஷால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமீபத்தில், நடிகர் ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் வெளிவந்த ‘பில்லா பாண்டி’, நடிகர் உதயா தயாரித்து நடித்து வெளிவந்த ‘உத்தரவு மகாராஜா’ ஆகிய படங்களுக்குப் போதுமான திரையரங்குகள் கிடைக்காத‌தால், அவர்கள் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரிலீஸ் கமிட்டி என்ற ஒன்று உள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

மூத்த தயாரிப்பாளர்கள் சிலருக்கான பென்ஷன் பணத்தை தராமல் நிறுத்திவைத்து அவர்களை கஷ்டப்படுத்துவது, செயற்குழு ஒப்புதல் இல்லாமல் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகையை குறைத்தது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் விஷால் தலைமையிலான நிர்வாகிகள் மீது முன்வைக்கப்பட்டுவருகிறது.

தமிழ் ராக்கர்ஸைப் பிடிப்பேன், திரைப்படங்களின் வருமானத்தில் விவசாயிகளுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வழங்குவேன் என்பவை விஷால் கொடுத்த வாக்குறுதிகளில் குறிப்பிடத்தக்கவை.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *