wவிலைபோகா புகையிலை: வருத்தத்தில் விவசாயிகள்!

Published On:

| By Balaji

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில் மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட விர்ஜினியா புகையிலை ஏலம் இதுவரை மந்தமாகவே உள்ளதால் புகையிலை விற்கப்படாமலும், குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையும் உண்டாகியுள்ளது.

மே 25ஆம் தேதி வரை, மொத்தம் 26 மில்லியன் கிலோ புகையிலை கிலோ ஒன்றுக்கு ரூ.144.29க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் 136 மில்லியன் கிலோ அளவிலான புகையிலை உற்பத்தி செய்யப்படுமென்று புகையிலை வாரியம் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 125 மில்லியன் கிலோ அளவிலான புகையிலை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. கர்நாடகாவில் 106 மில்லியன் கிலோ அளவிலான புகையிலை கிலோ ரூ.139க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறைந்த தரத்திலான புகையிலை கிலோவுக்கு 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் சாகுபடி செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் விவசாயிகள் கவலைக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலை ஒருவார காலத்தில் மாறி ஏலம் விறுவிறுப்பாக மாறும் என்றும், புகையிலையின் விலையில் முன்னேற்றம் ஏற்படுமென்றும், விவசாயிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share