Wவிமர்சனங்களைத் தகர்த்த சிஎஸ்கே!

public

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் அணி தேர்வில் கையாண்ட சமயோஜித முடிவை இலங்கை வீரர் சங்கக்கரா பாராட்டியுள்ளார்.

ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியவர் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் சங்கக்கரா. தற்போது நடந்து வரும் ஐபிஎல் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அவர் சென்னை அணி குறித்துப் பேசினார்.

அதில், “சென்னை அணியின் இந்த ஆண்டு வீரர்கள் தேர்வுமுறை பற்றி நிறைய கேலிகளும் கிண்டல்களும் துவக்கத்தில் எழுந்தன. ஆனால் இளைஞர்களைவிட அனுபவம் மிக்க வீரர்களை அதிகமாக விலைக்கு வாங்கிய சென்னை அணி சிறப்பாகவே தொடரில் விளையாடி வருகிறது. அணியை எவ்வாறு தேர்வு செய்வது என்கிற விஷயத்தில் சமயோஜிதமாக முடிவெடுத்து சென்னை அணியினர் வெற்றி கண்டுள்ளனர்” எனப் பாராட்டினார்.

மேலும், “சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ள ஃபைனலில், ரஷித் கானுக்கும் சென்னை அணிக்குமே கடுமையான போட்டி இருக்கும் எனத் தெரிகிறது” என்றார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *