சென்னை குரோம்பேட்டையில் பைக் செல்ல வழிவிடுவது தொடர்பாக நடந்த தகராறில் தாக்கப்பட்ட பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை குரோம்பேட்டை நாகல்கேணியைச் சேர்ந்தவர் விக்னேஷ். 16 வயதான இவர், கடந்த 17ஆம் தேதியன்று தனது பள்ளி நண்பர் நந்தாவுடன் சேர்ந்து பைக்கில் வெளியே சென்றார். அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோயில் தெருவைக் கடக்கும்போது, அவர்களது பைக் செல்ல வழியில்லாமல் வழியை மறித்துக்கொண்டு ஒரு கார் நின்றது. இதனால், பைக் செல்ல வழிவிடுவது தொடர்பாகக் காரில் இருந்தவர்களுடன் மாணவர்கள் இருவரும் சண்டையிட்டனர்.
பம்மல் நகர பாஜக பிரமுகர் மதன், அவரது மகன் நித்தியானந்தம் ஆகியோர் அந்த காரில் இருந்தனர். அவர்கள், விக்னேஷையும் நந்தாவையும் கடுமையாக எச்சரித்தனர். சில நிமிட வாக்குவாதத்துக்குப் பின்னர், நந்தாவும் விக்னேஷும் அங்கிருந்து அகன்று விட்டனர். சிறிது நேரம் கழித்து, மீண்டும் அந்த வழியே வந்தனர். அப்போது, தன் மகனுடன் சேர்ந்து மீண்டும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார் மதன். தன்னிடமிருந்த கத்தியால் இருவரையும் தாக்கினார்.
இதில், விக்னேஷ் மற்றும் நந்தா இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்த சிலர், இருவரையும் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த விக்னேஷ், இன்று (மே 20) உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சங்கர் நகர் போலீசார், மதனையும் அவரது மகன் நித்தியானந்தத்தையும் கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.
�,”