5
மார்ச் 15ஆம் தேதியன்று நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தீவிரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 50 பேர் பலியாகினர். உயிரிழந்தோரில் ஐந்து பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதி அதை நேரலையில் பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீம் செய்தார். பின்னர் அந்த வீடியோவை பேஸ்புக் நிர்வாகம் நீக்கிவிட்டது. மேலும், ஆஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் வெறுப்புணர்ச்சியை பரப்பும் குழுக்களை பேஸ்புக் நிர்வாகம் நீக்கிவிட்டது.
மசூதி தாக்குதலின் வீடியோவை பலரும் தொடர்ந்து லைவ் ஸ்ட்ரீம் செய்து வந்தனர். கடந்த வாரம் வரை 15 லட்சம் வீடியோக்களை நீக்கிவிட்டதாக பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்தது. இந்த வீடியோவை தொடர்ந்து பலரும் லைவ் ஸ்ட்ரீம் செய்து வருவதால் பேஸ்புக் மற்றும் யூட்யூப் மீது வழக்கு தொடுக்கப்போவதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு ஒன்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த வீடியோ ஸ்ட்ரீம் செய்யப்படுவதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், லைவ் ஸ்ட்ரீம் வீடியோக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ஷெரில் சேண்ட்பெர்க் தெரிவித்துள்ளார். பயனர்களின் முந்தைய விதிமீறல்களின் அடிப்படையில் யார் யார் லைவ் ஸ்ட்ரீம் செய்கிறார்கள் என்பது கண்காணிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.�,