ஒரு திரைப்படத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டு நடிக்கும் வெகு சில நடிகர்களில் பிரபாஸை தவிர்த்துவிட முடியாது. ‘பாகுபலி’ படத்துக்காக தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். ‘பாகுபலி’ இரண்டாம் பாகம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் பிரபாஸின் பணிகள் முடிந்துவிட்டது. இதுபற்றி இயக்குநர் ராஜமௌலி தன் டிவிட்டர் பக்கத்தில் பிரபாஸுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதில், “பிரபாஸ் கிளம்புகிறார். 3.5 ஆண்டுகள், ஒரு நீண்ட பயணம். மிக்க நன்றி டார்லிங். இந்த பெரிய ப்ராஜக்ட் நீங்கள் இல்லாமல் சாத்தியமாகியிருக்காது” என்று பதிவு செய்துள்ளார். விரைவில் பாகுபலியை கட்டப்பா கொலை செய்ததற்கான காரணத்தை நாம் அறியப்போகிறோம்.�,
+1
+1
+1
+1
+1
+1
+1