2019 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைப் பணிகள் நேற்று (மே 24) நடைபெற்றன. இதில் 350 தொகுதிகளுடன் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியோ 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைவிட மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. உ.பி. மாநிலம் அமேதி தொகுதியில் கடந்த இரண்டு முறை எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி இம்முறை தோல்வியடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றுள்ளார்.
நேற்று (மே 23) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு ராகுல் காந்தியோ, “அதை காங்கிரஸ் செயற்குழு தீர்மானிக்கும்” என்று பதிலளித்தார். காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு சந்தித்த முதல் தேர்தலிலேயே மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளார் ராகுல் காந்தி.
காங்கிரஸின் தோல்வியைத் தொடர்ந்து தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகக் கட்சி சீனியர்கள் சிலர் குரல் எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியிடம் ராகுல் காந்தி ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் இவ்விவகாரத்தைச் செயற்குழுவிடம் விட்டுவிடலாம் என்று பரிந்துரைத்ததாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் கூறகின்றனர்.
தேர்தல் தோல்வி பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்தன் திவேதி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தத் தோல்வி எனக்கு வியப்பளிக்கவில்லை. மேற்கொண்டு எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்தார். ராகுலின் தலைமை கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கும் அதிருப்தியளித்திருப்பதாகத் தெரிகிறது. தோல்வி குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் குமாரசாமி. மேலும் ராகுல் மீது சில காங்கிரஸ் சீனியர்களும் அதிருப்தியில் இருப்பதால் அவர் தலைவர் பதவியை இழக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க திமுக வியூகம்!](https://minnambalam.com/k/2019/05/23/167)
**
.
**
[மோடிகளை உருவாக்கும் மோடி](https://minnambalam.com/k/2019/04/11/19)
**
.
.
�,”