நடிகையாக இருந்தாலும், பாடகியாகவும் தன்னுடைய பங்களிப்பைத் தொடர்ந்து செலுத்தி வரும் ஆண்ட்ரியா, தனிப்பாடல் வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை ஆண்ட்ரியா. மேலும், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட்டான பாடல்களையும் பாடியுள்ளார்.
ஏற்கெனவே சில இசை ஆல்பங்களில் பாடியிருக்கும் ஆண்ட்ரியா, இப்போது புதிய இசை ஆல்பத்தையும் வெளியிட்டிருக்கிறார். ‘ஹானஸ்ட்லி’ (Honestly) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த இசை ஆல்பத்தில் அவரே பாடலை எழுதி, பாடி, நடித்தும் இருக்கிறார்.
இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா ஜெரிமியா (guitarist ) ஆகியோரின் பங்களிப்பு இந்தப் பாடலில் உள்ளது. சமீபத்தில் ஆங்கில மொழியில் இவரது (Honestly) ‘[ஹானஸ்ட்லி](https://www.youtube.com/watch?v=VIbykXR0qco)’ பாடல் வீடியோ காட்சி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சமீபத்தில் வெளியான விஸ்வரூபம் 2 படத்தில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா, இவர் நடித்துள்ள வடசென்னை திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.�,”