wமாநில கல்லூரி மாணவர்களுக்கு ஆணையர் அறிவுரை!

Published On:

| By Balaji

மாணவர்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அதில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று(ஆகஸ்ட் 31) சென்னை மாநில கல்லூரியில் இறைவணக்க கூட்டத்திற்கு பின் காவல் ஆணையர் பேசினார். அப்போது, மாணவர்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ, அதில் கவனம் செலுத்துங்கள்.

எனது தாத்தா காவலர், எனது தந்தை எஸ்.ஐ, நான் அரசுப் பள்ளியில் படித்தவன். கிராமத்திலிருந்து வந்து சென்னை மாநில கல்லூரியில் படித்தது எனக்குப் பிரமிப்பாக இருந்தது. வரலாறு மாணவர்கள் மனித மனங்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும். தமிழ் இலக்கியத்தையும் ஆர்வத்துடன் படித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது.

மாணவர்கள் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு, தங்களது வாதத் திறமையையும், தலைமைப் பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்குப் பயனை எதிர்பாராமல் உதவி செய்ய வேண்டும். எதிரிக்கும் அன்பாக இருக்க வேண்டும். மாணவர்கள் தங்களது ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் கெட்டபெயர் ஏற்படுகிறது. மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி விடக் கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

நேற்று(ஆகஸ்ட் 30)மாநகர பேருந்தில் பட்டாக் கத்தியுடன் பயணம் செய்த நான்கு மாநில கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்கள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share