wபோலீஸ் அனுமதியுடன் மணல் கொள்ளை: துரைமுருகன்

Published On:

| By Balaji

குடிநீர் பிரச்சினை குறித்து விவாதிக்க உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்ட அரசுக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது. திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் தலைமையில் திமுகவினர் வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமனை நேற்று (ஜூன் 14) நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “பாலாற்றில் இருக்கும் மணலை சுரண்டி எடுத்துவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல் இப்போதும் திருட்டுத்தனமாக மணம் எடுக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரைக் கேட்டால் மணல் அள்ளுவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்று கூறுகிறார். ஆனால் காவல்துறைதான் மணல் அள்ளுவதற்கு மறைமுகமாக அனுமதி கொடுத்து வசூல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பணம் இருக்கிறது. அந்தப் பணத்தை எடுத்து ஆழ்துளைக் கிணறு அமைப்பது, வேறு உபகரணங்களை வாங்குவது போன்றவற்றுக்கு பயன்படுத்தி தண்ணீர் எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சினை தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. ஆகையால் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அந்த மனுக்கள் வாரக்கணக்கில் தூங்குகின்றன. போர்க்காலத்தைவிட அதிகமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் தண்ணீருக்காக உள்நாட்டு யுத்தம் போல மக்கள் கிளர்ச்சியை ஆரம்பித்துவிடுவார்கள்.

ஏனெனில், பசியைக்கூட பொறுத்துக்கொள்ளலாம், ஆனால் தாகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. *நீரின்றி அமையாது உலகு* என்று வள்ளுவர் கூறினார். இப்போது நீரில்லாமல் மக்கள் தத்தளிக்கின்றனர். அதிமுக தலைமையில் ஒத்தையா, இரட்டையா என்று பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பிரச்சினையெல்லாம் தெரியாது. புள்ளி விவரங்களுடன் தண்ணீர் பிரச்சினை பற்றி மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம்” என்று கூறினார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/14/51)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/13/22)**

**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/14/20)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/13/44)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share