wபெண்களுக்காகப் பெண்களே இயக்கும் ஆட்டோ சேவை!

public

பாரதி கண்ட புதுமை பெண்கள் பாரதம் எங்கும் எல்லாத்துறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பெண்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சேவையைத் தரும் தொழில் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் பெண்களுக்காகப் பெண்களே இயக்கும் ஆட்டோ சேவை தொடங்கியது. பெண்களுக்கான பிரத்யேக ஆட்டோ சேவையில் ஓட்டுநராகவும் பெண்களே பணியாற்றுகின்றனர்.

இதற்காக ஓட்டுநர் பயிற்சி பெற்ற பெண்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு வங்கியின்மூலம் குறைந்த வட்டியில் லோன் கிடைக்க ஏற்பாடு செய்தும், ஆட்டோ வாங்கவும் சூரத் நகராட்சி உதவி செய்கிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, இதில் ஏற்கெனவே 15 பெண்கள் ஆட்டோ ஓட்டுவதற்குத் தொடங்கிவிட்டதாகவும், பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளை ஆட்டோ மூலம் பள்ளியில் கொண்டுபோய் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வருவதாகவும் பெண் ஓட்டுநர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை சம்பாதிக்கலாம் என்றும் மாதந்தோறும் 18,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

“ஆண்களைப் போலவே நாங்களும் ஆட்டோ ஓட்டும் தொழிலில் வெற்றி பெறுவோம். இனி எங்களின் தேவையை நாங்களே பூர்த்தி செய்து கொள்வோம். கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்களின் நன்மதிப்பை பெறுவதுடன் அவர்களுக்கு உரிய பயண பாதுகாப்பை வழங்குவோம்” என்று பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0