மும்பை பங்குச் சந்தை மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யவும் வர்த்தகம் மேற்கொள்ளவும் “பி.எஸ்.இ. ஸ்டார் எம்.எஃப்” (BSE StAR MF) என்ற மொபைல் போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யவும் வர்த்தகம் மேற்கொள்ளவும் உதவும் வகையில் பி.எஸ்.இ. ஸ்டார் எம்.எஃப் என்ற மொபைல் போன் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இந்த ஆப் கிடைக்கிறது. இதை அனைத்து மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள், முகவர்கள் பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துகொண்டு பயன் பெறலாம்.
மும்பை பங்குச் சந்தையின் ஸ்டார் எம்.எப் மாதம் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட எஸ்.ஐ.பி முதலீட்டு திட்டங்களின் வர்த்தகத்தை கையாண்டு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தளத்தில் முதலீட்டுக்கான பணப்பரிவர்த்தனையை எளிமையாக மேற்கொள்வது, சொத்து மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கிடைக்கப்பெறுகிறது.�,