wநெட்வொர்க் சாதனங்கள்: காலக்கெடு நீட்டிப்பு!

Published On:

| By Balaji

தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கான பரிசோதனை மற்றும் சான்றிதழ் பெறுவதற்கான காலக் கெடுவை ஆகஸ்ட் 1 வரை அரசு நீட்டித்துள்ளது.

அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகளிடம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்றிதழ்கள் பெற்ற பின்னர்தான் தொலைத்தொடர்பு உபகரணங்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கிறது. 2011ஆம் ஆண்டில் முதன்முறையாக இதற்கான கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் தொலைத்தொடர்புத் துறையால் நிர்ணயிக்கப்பட்டு அதற்கான கால அவகாசம் 2013 மார்ச் 31 வரை நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு பலமுறை இதற்கான காலக்கெடுவை அரசு மாற்றியமைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது, தொலைத்தொடர்புத் துறையின் ஓர் அங்கமான தொலைத்தொடர்பு பொறியியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொபைல்போன்கள் மற்றும் இதர தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கான பரிசோதனை மற்றும் சான்றிதழ் பெறுவதற்கு 2019 ஆகஸ்ட் 1ஆம் தேதியைக் காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு மொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. மொபைல் பேஸ் ஸ்டேஷன், வைஃபை மையங்கள், சேட்டிலைட் உபகரணங்கள், மொபைல்போன்கள், இணையம் சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து சாதனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share