ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இறுதிப் போட்டியில் 0-0 (1-3) என்ற கோல்கணக்கில் தோற்றுவிட்டது. உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை, இறுதிப் போட்டியில் கோல் அடிக்கவிடாமல், பெனால்டி ஷூட்-அவுட்டில் சென்று தோல்வியடைந்ததை வெற்றியாகவே கருதுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார் நரேந்திர பத்ரா. ஆட்ட நேரத்துக்குள் இரு அணிகளும் கோல் அடிக்காததால், பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்றபோது ஹர்மன்ப்ரீத் சிங் மட்டும் ஒரு கோல் அடித்தார். உத்தப்பா, சுனில் ஆகியோர் அடித்த பந்து வெளிப்பக்கமாக சென்றுவிட்டது. ஆனால், ஆஸ்திரேலியா தொடர்ந்து மூன்று கோல்களை கோல் கம்பத்துக்குள் அடித்து வெற்றி பெற்றுவிட்டது. ‘ஒரு ஆட்டத்தில்கூட தோற்காமல் (ஒரே ஒரு ஆட்டம் டிரா செய்திருக்கிறது) முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவை, இறுதிப்போட்டியில் கோல் அடிக்கவிடாமல் தடுத்ததே மிகப் பெரிய வெற்றியாக கொண்டாடுங்கள்’ என்று நரேந்திர பத்ரா கூறியிருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியின் வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.2 லட்சம் பரிசு அறிவித்ததோடு, அணியின் ஸ்டாஃப்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்திருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ‘சிறந்த இளம் வீரர்’ விருதை வென்ற ஹர்மன்ப்ரீத் சிங்குக்கு மேலும் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்தார் இந்திய ஹாக்கி அகாடமியின் தலைவர் நரேந்திர பத்ரா. ஒரு கோல் கூட அடிக்காமல், பெனால்ட்டி ஷூட்-அவுட் வரை சென்று தோற்ற இந்திய அணிக்கு இந்த பரிசு தேவையா? என்ற சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இந்த தோல்வி ஏற்றுக்கொள்ளமுடியாத தோல்விதான் என்றாலும், அடுத்து ஒலிம்பிக்கில் விளையாடவிருக்கும் இந்திய அணி, இந்த தோல்வியால் சோர்வடைந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களை ஊக்கப்படுத்த இந்த பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தோல்வியும், வெற்றியும் விளையாட்டில் சகஜம். தோல்வியிலிருந்து, அட்டாக்கிங் பொசிஷனில் இந்திய அணி செய்ய வேண்டிய முன்னேற்றங்களில் கவனம் செலுத்துமா? என்பதுதான் தற்போது கவலைப்படவேண்டிய விஷயம்.�,
wதோற்றுப்போன இந்திய அணிக்கு பரிசு முக்கியமா?
+1
+1
+1
+1
+1
+1
+1