‘திராவிட என்னும் சொல்லை தங்களின் கட்சிப் பெயர்களில் வைத்துகொண்டுள்ள கட்சிகளின் கொள்கைகள் என்ன என்று யாருக்காவது தெரியுமா? ஒன்று, முதலமைச்சர் ஆவது தங்களின் லட்சியம் என்கிறார்கள். இல்லையேல், திராவிடக் கட்சிகளை ஒழிப்பது தங்களின் கொள்கை என்கிறார்கள். திராவிடக் கட்சிகளை ஒழிப்பதாக கூறும் கட்சிகளின் உண்மை நோக்கம், லட்சியம், வெறித்தனமான பகையுணர்வு எல்லாமே திமுக-வை ஒழிக்க வேண்டும் என்பதுதான். திமுக-வை ஒழித்துவிட துடிப்பது, சாதி மத சக்திகளின் அதிகாரத்தை நிலைநாட்ட துடிக்கும் ஒரு கனவுதான். ஆனால், அவர்களின் பகல்கனவை தவிடு பொடியாக்குவோம். தமிழகத்துக்குப் பல நன்மைகளை செய்த திராவிடக் கட்சி, திமுகதான். திராவிடத்தை அழிக்க முடியாது. ஏழை எளியவர்கள் எழுச்சியும் வளர்ச்சியும் பெற தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்ந்தால் மட்டுமே முடியும்’ என்றார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ் மாநிலத் தலைவர், கே.எம் காதர் மொய்தீன்.�,
wதிராவிடத்தை அழிக்க முடியாது: காதர் மொய்தீன்
+1
+1
+1
+1
+1
+1
+1