wஜிஎஸ்டி ரிட்டன் தாக்கலுக்குப் புதிய படிவம்!

public

ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கலுக்கான புதிய படிவத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் உருவாக்கவுள்ளது.

ஜிஎஸ்டி நெட்வொர்க்குக்கான அமைச்சர்கள் குழுவின் 9ஆவது கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைச்சர்கள் குழுவின் தலைவரும், பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி, ஆண்டுக்குத் தற்போது 37 முறை ரிட்டன் தாக்கல் செய்யப்படுகிறது. இதை 13 ஆகக் குறைக்க முயற்சித்துவருகிறோம். அடுத்த சில நாட்களில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஒற்றைப் பக்கத்திலான ஜிஎஸ்டி படிவத்தைக் கொண்டுவரும் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படும்” என்றார்.

ஜிஎஸ்டி நெட்வொர்க் தளத்தை மேம்படுத்த ரூ.1,380 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஜிஎஸ்டியில் தற்போது 12.48 கோடி பேர் ரிட்டன் தாக்கல் செய்கின்றனர். கடந்த மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.95,610 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய மாதத்தில் இதன் மதிப்பு ரூ.94,016 கோடியாக இருந்தது. இதுகுறித்து சுஷில் குமார் மோடி மேலும் கூறுகையில், “ஜிஎஸ்டியில் தொடக்கத்தில் இருந்த சிக்கல்கள் பல தீர்க்கப்பட்டுள்ளன. இதற்காக இன்ஃபோசிஸ் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் மேலும் மேம்படுத்தப்பட்டுச் சிறந்த வரி அமைப்பு முறையானதாக மாற்றப்படும்” என்றார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் புதிய வரித் தாக்கல் படிவத்தையும் உருவாக்கித்தர வேண்டுமென ஜிஎஸ்டி குழுவில் உள்ள அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விரைவில் இன்ஃபோசிஸ் நிறுவனம் புதிய தளத்தை உருவாக்கித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *