�
திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் மீது நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான சென்னை மற்றும் காட்பாடி பகுதியிலுள்ள வீடுகள், கல்லூரி மற்றும் அலுவலகங்கள் என 9 இடங்களில் கடந்த 2011-ஆம் ஆண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதையடுத்து துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி துரைமுருகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக நேற்று வேலூர் கோர்ட்டில் வாதம் நடைபெற்றது. இதில் துரைமுருகன் சார்பில் வேலூர் வழக்கறிஞர் வரதராஜன், அவரது மனைவி சாந்தகுமாரிக்கு சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் இளங்கோ ஆகியோர் வாதாடினார்கள்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞரும் வாதாடினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தட்சிணாமூர்த்தி இந்த வழக்கில் இருந்து துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டார்.�,