வரி செலுத்துவோரை சமூக வலைதளங்களில் வருமான வரித் துறை கண்காணித்து வருவதாக வெளியான செய்திகளுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
கணக்கில் வராத பணத்தை கண்டறிவதற்காக வரி செலுத்துவோரின் வெளிநாட்டுப் பயணங்கள், விலையுர்ந்த பொருட்கள் போன்றவற்றை வருமான வரித் துறை சமூக வலைதளங்களில் கண்காணித்து வருவதாக சில செய்திகள் வெளியாகின. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பி.சி.மோடி *பிடிஐ* செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், “கணக்கில் வராத பணத்தை கண்காணிக்க சமூக ஊடகங்களில் நாங்கள் உளவு பார்க்கிறோம் என்பது தவறான கருத்து. நாங்கள் ஏன் சமூக வலைதளங்களில் கண்காணிக்க வேண்டும்?
பயண தகவல்கள், இதர பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விவரங்களை வேறு முகமைகள் வாயிலாக நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். எந்தத் துறைகளுக்கு அதிகம் வரி விதிக்க வேண்டும், எந்தத் துறைகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள மேம்பட்ட பகுப்பாய்வுகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் பயன்படுத்தி வருகிறது. இதுமட்டுமல்லாமல் குறுஞ்செய்தி சேவையையும் தொடங்க மத்திய நேரடி வரிகள் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, ஒரு நபர் குறிப்பிட்ட அளவு தொகைக்கு மேல் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் குறித்து அவருக்கு தகவல் அளிக்கப்படும்.
வரித் துறைக்கும், வரி செலுத்துவோருக்கும் இடையே விரோதம் இல்லாத முறையை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரி செலுத்துவோர் இவ்வளவு பரிவர்த்தனைகள் மேற்கொண்டது எங்களுக்கு தெரியும் எனவும், அவற்றை வருமான வரி ரிட்டன்களில் அவர் குறிப்பிட்டு வரி செலுத்த வேண்டும் எனவும் சம்பந்தப்பட்டவருக்கு தெரிவிப்பதற்காகவே இதுபோன்ற முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், கிரெடிட் கார்ட் நிறுவனங்கள், பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து தேவையான தகவல்களை வருமான வரித் துறை பெற்றுக்கொள்கிறது. வரி இணக்க சமூகத்தை உருவாக்கி நேர்மையாக வரி செலுத்துவோருக்கு மரியாதையளித்து, விதிமீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே எங்களது நோக்கம்” என்று தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
�,”